Thursday, September 4, 2025

GST யில் மாற்றங்களைச் செய்ய அரசை தூண்டியது எது? – பா. சிதம்பரம் கேள்வி

ஜிஎஸ்டி வரி குறைப்புக்கு முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் வரவேற்பு தெரிவித்துள்ளார். ஆனால், இது மிகவும் தாமதமான நடவடிக்கை என்றும் விமர்சித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில்; சரக்கு மற்றும் சேவைகளின் வரி விகிதங்களைக் குறைத்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் 8 ஆண்டுகள் மிகவும் தாமதமாகிவிட்டது.

கடந்த 8 ஆண்டுகளாக ஜிஎஸ்டியின் வடிவமைப்பு மற்றும் விகிதங்களுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தோம். ஆனால் எங்களின் கோரிக்கைகள் கேட்கப்படவில்லை.

இந்த மாற்றங்களைச் செய்ய அரசை தூண்டியது எது என்பதை யூகிப்பது சுவாரஸ்யமாக இருக்கும். மந்தமான வளர்ச்சியா? அதிகரிக்கும் குடும்பக் கடனா? குறையும் குடும்ப சேமிப்புகளா? பீஹார் தேர்தலா? டிரம்ப் மற்றும் அவரது வரி விதிப்புகளா? மேலே குறிப்பிடப்பட்ட அனைத்துமா?, எனக் குறிப்பிட்டுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News