உணவு, தண்ணீர் போலவே தூக்கமும் ஒரு மனிதனுக்கு அத்தியாவசியமானது. போதுமான தூக்கம் இல்லையென்றால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும். இரவில் நீண்ட நீரம் மொபைல் பார்ப்பதால் பலருக்கும் தூக்கம் கெடுகிறது. நாள் ஒன்றுக்கு 5 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன என்பதை இதில் பார்ப்போம்.
5 மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்குகிறவர்கள் இதய நோய், டைப் 2 நீரிழிவு நோய், சிறுநீரக கோளாறுகள், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற பல உடல் பிரச்னைகளுக்கு ஆளாக வாய்ப்பு உள்ளது.
Also Read : தூக்கமே வரலையா? தூக்கத்தை தூண்டும் உணவுகள் இதோ..!
கவனம், நினைவாற்றல் குறைவு, தவறான முடிவெடுப்பு, மூளை செயல்திறன் குறைவு போன்ற மன ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படலாம். போதுமான தூக்கமின்மையால் நாளில் தூக்க கலக்கம் ஏற்பட்டு, இது வாகனம் ஓட்டும்போது கூட விபத்து ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
எவ்வளவு தூக்கம் தேவையானது?
நாள்தோறும் 7 முதல் 8 மணி நேரம் தூங்குவது கட்டாயம். தூக்கத்திற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக மொபைல் மற்றும் லேப்டாப் பயன்பாட்டை தவிர்க்கவும். தூங்குவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்னரே சாப்பிடவும். தூக்கப் பிரச்சனைகள் தொடர்ந்தால், அவசியம் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது முக்கியம்.