Thursday, April 3, 2025

‘செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது’ : அமிதாப் பச்சன் போட்ட பதிவுக்கு என்ன காரணம்?

இந்தி திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் அமிதாப் பச்சன் சமீபத்தில் தமிழில் வெளியான ‘வேட்டையன்’ படத்தில் ரஜினிகாந்துடன் நடித்திருந்தார். 82 வயதாகும் அமிதாப் பச்சனுக்கு சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார்.

இந்நிலையில் அமிதாப் பச்சன் தனது எக்ஸ் தளத்தில் ‘செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது’ என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அமிதாப் பச்சன் சினிமாவில் இருந்து விலகப்போவதாக பேசி வந்தனர்.

இதற்கு விளக்கம் அளித்து அமிதாப் பச்சன் கூறும்போது, நான் படப்பிடிப்புக்கு செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது என்பதுதான் அந்த பதிவுக்கு அர்த்தம்” என்றார்.

Latest news