துணை மேயரை பொருத்தவரை, அதிகார ரீதியாக, பொறுப்பு ரீதியாக அது ஒரு கவுரவ பதவியாகவே பார்க்கப்படுகிறது. என்னதான் அவர் துணை மேயராக இருந்தாலும், அவரது ஒப்புதல், சக கவுன்சிலர்களின் ஒப்புதலாகவே பார்க்கப்படும். பிறகு என்ன துணை மேயருக்கு பவர் பார்க்கலாம்…
மாமன்ற கூட்டத்தில் மேயரின் அருகில் அமர்ந்து சபையில் பங்கேற்கலாம்.
துணை மேயருக்கு மாநகராட்சி அலுவலகத்தில் தனி அறை ஒதுக்கப்படும்
மேயர் போன்றே துணை மேயருக்கும் ‛டவாலி’ ஒருவர் நியமிக்கப்படுவார்
துணை மேயருக்கு மாநகராட்சி சார்பில் பதவிக்காலம் வரை வசிக்க பங்களா வழங்கப்படும்
துணை மேயருக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கார் வழங்கப்படும். எரிபொருளும் தரப்படும்.
துணை மேயருக்கு ஊதியம் கிடையாது
மேயர் வெளியூர் சென்றால், அல்லது செயல்முடியாத காலத்தில் அவரது பொறுப்புகளை துணை மேயர் கவனிக்கலாம்.