Thursday, January 15, 2026

”Time to Go” என்ன நடந்தது? ரவி சாஸ்திரி Open Talk

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற்றது, இன்னுமே ரசிகர்களுக்கு தீராத அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவரின் ஓய்வுக்கு விதவிதமான, வித்தியாசமான காரணங்களை ஒவ்வொருவரும் சொல்லி வருகின்றனர்.

ஆனால் உண்மை காரணத்தை இதுவரை யாருமே சொல்லவில்லை. இந்தநிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, விராட் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார். இதுகுறித்து அவர், ”கோலி டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வு குறித்து எனக்கு மெசேஜ் அனுப்பினார்.

உடல்ரீதியாக Fitness ஆக இருந்தாலும், தன்னுடைய மனது ஓய்வு தேடுவதாக சொன்னார். இதற்கு மேல் என்னால் முடியாது என்றார். விராட் பொறுத்தவரை களத்தில் 100 சதவீதம் உழைப்பை கொடுப்பவர். ஒருகட்டத்தில் இது போதுமென்று அவருக்குத் தோன்றி விட்டது.

இதுதான் அவரின் திடீர் ஓய்வு அறிவிப்புக்குக் காரணம்,” என்று பேசியிருக்கிறார். அதேநேரம் பார்டர் கவாஸ்கர் தொடரின் போது மீண்டும் கேப்டன் பதவியை எதிர்பார்ப்பதாக BCCIக்கு அவர் Hint கொடுத்ததாகவும், ஆனால் BCCI அதனை கண்டுகொள்ளவில்லை என்பதால், வெறுத்துப்போய் இந்த முடிவுக்கு வந்ததாகவும் புதிய த்கவல்கள் வெளியாகி இருக்கின்றன.

எது எப்படியோ புகழின் உச்சத்தில் இருந்தபோதே விராட் தன்னுடைய ஓய்வினை அறிவித்து, மற்ற வீரர்களுக்கு ஒரு ரோல்மாடலாக மாறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News