தற்போது எங்கு பார்த்தாலும் NOC எனப்படும் No Objection Certificate என்ற ஒன்று தான் அதிகம் பேசப்பட்டு வருகிறது.. இந்த நிலையில் தனுஷ் செய்த செயல் தற்போது காட்டுத்தீ போன்று பரவி வருகிறது.
அதாவது, பட்டிதொட்டி எங்கும் கலக்கிவரும் பிரபல YouTub சேனல் Vj Siddhu Vlogs. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தங்களது நகைச்சுவையில் கட்டி போட்டு வைத்திருக்கிறார்கள் என்று சொல்லலாம், அந்த அளவிற்கு அவர்கள் பிரபலம்.. மேலும், வி.ஜே. சித்து தனது யூடியூப் சேனலில் அறிமுகத்திற்காக எப்போதும் வேலையில்லா பட்டத்தரியின் பின்னணி இசையைப் பயன்படுத்துவர், அது கிட்டத்தட்ட அவரது தனிச்சிறப்பு இசையாக மாறிவிட்டது. இந்த நிலையில், வி.ஜே. சித்து, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் “தயங்காரம்”{Dayangaram} திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்.
இருப்பினும், இந்த திரைப்படத்தை குறித்து ஒரு தகவல் பரவிவருகிறது, அதாவது வி.ஜே. சித்து தனது “தயங்காரம்”{Dayangaram} திரைப்படத்தில் வேலையில்லா பட்டத்தரியின் பின்னணி இசையைப் பயன்படுத்த தனுஷிடமிருந்து NOC பெற முயன்றபோது, தனுஷ் அதை தயக்கமின்றி இலவசமாகக் கொடுத்துள்ளாராம்.
இதனைத் தொடர்ந்து, வெற்றிமாறன் இயக்கத்தில் STR இணைந்து நடிக்கும் திரைப்படத்தில், தனுஷ் தனது ‘வடசென்னை’ திரைப்படத்தின் கதாபாத்திரப் பெயர்கள் மற்றும் சில குறிப்புகளைப் பயன்படுத்த ஒரு ரூபாய் கூட வாங்காமல் NOC கொடுத்ததாக வெற்றிமாறன் தெரிவித்தார்..
இந்த திரைப்படமும் வடசென்னை பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாகும். மேலும், சில நாட்களுக்கு முன்பு, தனுஷ் விஜய்யின் ஜன நாயகன் குழுவினருக்கு இட்லி கடைக்காக அமைக்கப்பட்ட செட்டை எந்த தயக்கமும் இல்லாமல் பயன்படுத்த அனுமதித்ததாகவும் தகவல் வெளியாகியது, இப்போது விஜே சித்துவுக்கு இலவசமாக NOC கொடுத்தது ஒரு பெரிய பரபரப்பு ஏற்பட்டது.
சமீபத்தில் தனுஷ் செய்த இந்த உதவிகள் அனைத்தையும் பார்க்கும்போது, நயன்தாரா மீது உள்ள கருத்துவேறுபாடு காரணமாகவே, நயன்தாராவின் திருமண ஆவணப்படத்தில் நானும் ரவுடி தானின் ஒரு BTS clip எனப்படும்”Behind The Scenes” பயன்படுத்துவதற்கு மட்டும் NOC வழங்க 10 கோடி ரூபாய் கேட்டார் என்பத தெரிகிறது..
இந்த நிலையில் , NOC பிரச்சினைகளுக்காக தனுஷுக்கு எதிராக பல கடுமையான விமர்சனங்களுக்குப் பிறகு, தனுஷின் சமீபத்திய தாராள மனப்பான்மை செயல்கள் பார்வையாளர்களிடையே அவரது நன்மதிப்பை மெதுவாக அதிகரித்து வருகிறது.