அனைத்து தொலைபேசிகளிலும் பிளைட் மோட் அல்லது ஏர்பிளேன் மோட் என்ற அம்சம் இருப்பது அனைவருக்கும் தெரியும். இதன் மூலம் மொபைல் போனின் அனைத்து வயர்லெஸ் தொடர்புகள் தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன. குறிப்பாக, விமானப் பயணங்கள் போது, தொலைபேசியில் இருந்து வெளியேறும் ரேடியோ அலைகள் விமானத்தின் வழிசெலுத்துதலை பாதிக்காமல் இருக்க இதை பயன்படுத்துவர். விமானத்தில் மட்டுமின்றி, இந்த ஏர்பிளேன் மோடு மற்ற பல முக்கிய நன்மைகளும் உடையது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
பேட்டரி பாதுகாப்பு
சில நேரங்களில், நெட்வொர்க் சிக்னல் கிடைக்காத இடங்களிலும், மொபைல் தன்னிச்சையாக சிக்னலை தேடிக்கொண்டே இருக்கும். இதனால் பேட்டரி வேகமாக காலியாகும். அந்தச் சூழலில், ஏர்பிளேன் மோடு இயக்க வேண்டும். இதனால் தொலைபேசி அந்த தேடல் செயல்பாட்டை நிறுத்தி பேட்டரியை சேமிக்க முடியும்.
சார்ஜ் வேகம்
சிலர் விரைவாக மொபைலை சார்ஜ் செய்ய விரும்பினால், ஏர்பிளேன் மோடு கொண்டு சார்ஜ் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. நெட்வொர்க் தேவை இல்லாமல் இருப்பதால், சார்ஜிங் வேகம் சுமார் 20 முதல் 25 விழுக்காடு வரை அதிகரிக்கும்.
தொலைபேசி வெப்பமடைவதைத் தடுக்க
பொதுவாக, சிக்னல் இல்லையென்றால், தொலைபேசி மிக விரைவாக வெப்பமடையத் தொடங்குகிறது. எனவே, நீங்கள் Flight Mode ஐ இயக்கினால், தொலைபேசி குளிர்ச்சியாக இருக்கும். ஏனெனில், தொலைபேசி நெட்வொர்க்கைத் தேட முடியாது.
கவனச்சிதறலைக் குறைத்தல்
வேலை செய்யும்போது அல்லது படிக்கும் பொழுது, ஏர்பிளேன் மோடு இயக்கி வைத்தால், அனைத்து அழைப்புகள், செய்திகள் மற்றும் தகவல் அறிவிப்புகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதால் கவனம் மேம்படும்.