ஏப்ரல் 25ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் SRH அணி வென்று பாயிண்ட் டேபிளில் 8வது இடத்தினை எட்டியுள்ளது. நடப்பு தொடரில் 7வது தோல்வியை சந்தித்து CSK Play Off வாய்ப்பினை இழந்துள்ளது.
இதனால் சொந்த ரசிகர்களே அணி மீது மிகுந்த வெறுப்பில் உள்ளனர். இந்தநிலையில் தோல்விக்கு பிறகு தோனி அளித்த பேட்டியில், சென்னையின் ஓபனிங் வீரர்களை தாளித்துள்ளார். இதுகுறித்து அவர், ” மொத்தமாக 155 ரன்களை தான் அடித்தோம். இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்.
முதல் 10 ஓவர்கள் பேட்டர்களுக்கு சாதகமாக இருந்தது. ஆனால் அவர்கள் அடித்து ஆடவில்லை.போகப்போக பிட்ச் பவுலர்களுக்கு சாதமாக இருக்கும் என்று தெரிந்தும் கூட, பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்டவில்லை.
அணியில் ஒன்றிரண்டு குறைகள் இருந்தால் அதை சரி செய்யலாம். மொத்த அணியுமே சொதப்பும் போது என்ன செய்ய முடியும்?,” இவ்வாறு விரக்தியாக பேசியுள்ளார். முதல் 10 ஓவர்களை ஷேக் ரஷீத், ஆயுஷ் மாத்ரே, சாம் கரண் ஆகிய மூவரும் விளையாடினர்.
இதில் ரஷீத் டக் அவுட் ஆகி போன வேகத்தில் பெவிலியன் திரும்ப, கரண் 10 பந்துகளில் 9 ரன்களை எடுத்து மோசமாக அவுட் ஆனார். ஆயுஷ் மாத்ரே மட்டுமே ஓரளவு அடித்து ஆடி, 30 ரன்களை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.