இந்தியன் டாய்லெட் பழைய மாடல்,ட்ரெண்டியாக இருக்காது என்பது போன்ற காரணங்களை கூறி,அனைவரும் வெஸ்டர்ன் டாய்லெட்டிற்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள்.
பசிக்குதானே சாப்பிடுகிறோம் ,ருசிக்கு அல்லயே?,அழகு இருக்கும் இடத்தில் ஆபத்தும் இருக்கும்!
அழகாகவும் ட்ரெண்டியாகவும் இருக்கிறது என்று நினைத்து, நீங்கள் பார்த்து பார்த்து கட்டிய வெஸ்டர்ன் டாய்லெட்டுகளை ஏன் உபயோகிக்க கூடாது என்பதையும், இந்திய டாய்லெட்டுகளை ஏன் உபயோகிக்க வேண்டும் என்பதையும் இந்த பதிவில் காண்போம்.
தங்களின் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தவை இந்தியன் கழிவறை,அதில் நீங்கள் squat செய்வதுபோல அமருகிறீர்கள் ,அப்படி அமரும் பொழுது செரிமான மண்டலம் அழுத்த படுகிறது ,அப்படி அழுத்தப்படுவதால் தேவையற்ற கழிவுகள் எளிதில் வெளியேற உதவுகிறது.
மற்றும் இந்தியன் கழிவறை சுற்றுசூழலுக்கு உகந்தவை ஏன் என்றால் அதில் நீங்கள் காகிதத்தை உபயோகிக்கவேண்டிய அவசியம் இல்லை மற்றும் நீங்க வெஸ்டர்ன் கழிவறையில் பயன்படுத்தும் தண்ணீரை விட இதில் குறைவாகவே உபயோகிக்கிறீர்களாம்.
இது கோலன் கேன்ஸர் மற்றும் பிற நோய்கள் பரவுவதை தடுக்கிறதாம்,மற்றும் இந்த இந்திய கழிவறை கர்ப்பிணி பெண்களுக்கு உகந்ததாம் , எனவே அழகிற்காக கட்டுவதை நிறுத்திவிட்டு அபத்தளிக்காத இந்தியன் கழிவறையை பயன்படுத்தலாமே