Sunday, December 28, 2025

மேற்குவங்கம் ரயில்நிலையத்தில் கூட்ட நெரிசல் : 8 பேர் காயம்

மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள பர்தமான் ரயில் நிலையத்தில் நேற்று மாலை 4 மற்றும் 5வது நடைமேடைகளில் ஒரே நேரத்தில் ரெயில்கள் வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

ரெயில்களில் ஏறவும் இறங்கவும் பயணிகள் முண்டியடித்துகொண்டதால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 5 பெண்கள் உட்பட 8 பயணிகள் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related News

Latest News