Saturday, March 15, 2025

களைகட்டும் BTS 10ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டம்! ட்ரெண்டாகும் புதிய பாடல்.

K Pop ரக இசையில் முன்னணி வகித்து10 ஆண்டுகளாக ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டுள்ளது BTS இசைக்குழு.

தென்கொரியாவில் 2010ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2013ஆம் ஆண்டு ‘Big Hit Entertainment’ என்ற நிறுவனத்தின் கீழ் அறிமுகமானது BTS. இவர்கள் வெளியிட்ட ‘Too Cool For School’ என்ற முதல் பாடலே மெகா ஹிட் அடிக்க, இசையுலகில் தனக்கான இடத்தை விரைவாகவே பிடித்து விட்டது BTS.

இவர்களின் இரண்டாவது ஆல்பமான ‘Wings’, தென் கொரியாவில் முதன்முறையாக பத்து லட்சம் பிரதிகளை விற்று சாதனை படைத்தது. 2017ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவிலும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய BTS உலகம் எங்கும் பரிச்சயமானது.

6 அமெரிக்க இசை விருதுகள், 5 பில்போர்டு மியூசிக் விருதுகள், 24 கோல்டன் டிஸ்க் விருதுகள், கிராமி விருது உள்ளிட்ட விருதுகளை வாரிக் குவித்த BTS, 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இசையுலகில் வெற்றிகரமான 10வது ஆண்டை கொண்டாடும் வகையில் ‘Take Two ‘ என்ற பாடலை BTS குழு வெளியிட்டுள்ளது. ரசிகர்கள் இந்த பாடலை கொண்டாடி வரும் நிலையில், ட்விட்டரில் BTS10thAnniversary என்ற hashtag ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Latest news