Saturday, December 6, 2025

முக்கிய வங்கிகளின் வெப்சைட் பெயர்கள் மாற்றம் : நோட் பண்ணிக்கோங்க

அக்டோபர் 31, 2025-க்குள், இந்தியாவின் முன்னணி வங்கிகளான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), ICICI, HDFC மற்றும் ஆக்சிஸ் வங்கிகள், தங்கள் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் இருந்த .com அல்லது .co.in டொமைன் பெயர்களை .bank.in என்ற புதிய, பாதுகாப்பான டொமைனுக்குச் மாற்றி உள்ளன.

இந்த மாற்றம், பாதுகாப்பை உறுதி செய்யவும், நம்பகமான வங்கி இணையதளங்களை வாடிக்கையாளர்கள் பயன்படுத்துவதை வலுப்படுத்தவும், ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா (RBI) ஏற்படுத்தியது.

RBI அறிவுறுத்தியபடி, அனைத்து வங்கிகளும் .bank.in டொமைன் பெயரை தங்களது இன்டர்நெட் பேங்கிங் போர்டல்களில் பயன்படுத்தவேண்டும். பிஷிங் மற்றும் போலியான இணையதள மோசடிகளை தடுக்க இந்த நடவடிக்கை மூலம் ஆன்லைன் பேங்கிங் பாதுகாப்பு அதிகரிக்கும்.

.bank.in டொமைனை RBI அமைப்பு மூலம் சரிபார்க்கப்பட்ட நம்பகமான வங்கி நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டதால், இது இன்டர்நெட் பாதுகாப்பில் ஒரு சிறந்த முறையாக கருதப்படுகிறது. இதனால், வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் செய்வதில் அதிக நம்பிக்கை பெறுவார்கள் என்பதே RBI நோக்கம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News