‘டிரம்ப்பை சும்மா விடமாட்டோம்!’ – ஈரான் எடுத்த சபதம்! அதிகாரி பகீர் எச்சரிக்கை!

மேற்கு ஆசியாவில் நிலைமை இப்போது கைமீறிப் போய்க்கொண்டிருக்கிறது. பிப்ரவரி 28-ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரான் மீது நடத்திய அதிரடித் தாக்குதலில், ஈரானின் 86 வயது தலைவர் அலி கமேனி கொல்லப்பட்ட செய்தி ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த ஒரு சம்பவம், மத்திய கிழக்கில் ஒரு மிகப்பெரிய போருக்கான தொடக்கப்புள்ளியாக மாறியிருக்கிறது.

ஈரானின் முக்கிய பாதுகாப்பு அதிகாரியான அலி லாரிஜானி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பிற்கு மிகக்கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். “எங்கள் தலைவரின் இரத்தத்திற்கும், கொல்லப்பட்ட எங்களது ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கும் ட்ரம்ப் நிச்சயம் விலை கொடுத்தே தீரவேண்டும். அவரை நாங்கள் சும்மா விடமாட்டோம்” என்று அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். இது ஏதோ சாதாரண மோதல் அல்ல, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரானை துண்டு துண்டாக உடைக்க நினைப்பதாக அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த மோதலின் மற்றொரு முக்கிய திருப்பமாக, அமெரிக்காவின் பல ராணுவ வீரர்களை ஈரான் சிறைபிடித்துள்ளதாக லாரிஜானி கூறியுள்ளார். ஆனால், அமெரிக்கா தனது வீரர்களின் மரணத்தை மறைப்பதாக அவர் குறிப்பிடுகிறார்.

அதுமட்டுமில்லாமல், 300 மில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்காவின் THAAD ராடார் அமைப்பை ஈரான் தரைமட்டமாக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வெனிசுலாவில் அதிபர் மதுரோவை பிடியில் கொண்டுவந்தது போல, ஈரானிலும் சாதிக்கலாம் என்று ட்ரம்ப் நினைக்கிறார், ஆனால் அவர் இப்போது ஒரு பெரிய பொறியில் சிக்கிக்கொண்டார் என்று லாரிஜானி விமர்சித்துள்ளார்.

இந்தப் போரின் தாக்கம் வளைகுடா நாடுகளைப் பெரிதும் அச்சுறுத்தி வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருப்பதால், துபாய் போன்ற நகரங்களில் இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே உணவுப் பொருட்கள் கையிருப்பில் இருப்பதாக வரும் செய்திகள் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளன.

அண்டை நாடுகள் எக்காரணத்தைக் கொண்டும் தங்கள் நிலப்பரப்பை அமெரிக்கா பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என்றும், அப்படி அனுமதித்தால் ஈரானின் தாக்குதலுக்கு அந்த நாடுகளும் ஆளாக நேரிடும் என்றும் லாரிஜானி எச்சரித்துள்ளார். ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளுடன் தொடரும் இந்தப் போர், உலக நாடுகளின் அமைதியைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

Related News

Latest News