காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் வெளிநாட்டவர் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் பீகாரின் மதுபானியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் : “பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்குக் கற்பனையில் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பதிலடி கொடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி : இந்தியா ஒவ்வொரு பயங்கரவாதியையும் அவர்களை ஆதரிப்பவர்களையும் அடையாளம் கண்டு தண்டிக்கும். பூமியின் கடைசி வரை அவர்களைத் துரத்துவோம். இந்தியாவின் உணர்வு பயங்கரவாதத்தால் ஒருபோதும் உடைக்கப்படாது. நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.