சீனாவிடம் கையேந்தும் நிலை இனி இல்லை! டெக்னாலஜி உலகின் ராஜாவாகக் கருதப்படும் ‘அரிய பூமி காந்தங்கள்’ (Rare Earth Magnets) உற்பத்தியில், இந்தியா தன்னிறைவு அடைய, 7,350 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு மெகா திட்டத்தை அறிவித்துள்ளது.
நம்ம மொபைல் போன், எலக்ட்ரிக் கார், ராக்கெட், ஏன், காற்றாலைகள் வரைக்கும் எல்லாத்துலயும் இந்த அரிய பூமி காந்தங்கள்தான் உயிர்நாடி. இதுவரைக்கும், இதுக்காக நாம சீனாவைத்தான் முழுசா நம்பியிருந்தோம். சீனா, இந்த தாதுக்களின் ஏற்றுமதிக்குத் தடை விதித்ததால், உலகமே ஆடிப்போனது. இனி அந்தப் கவலை இல்லை!
இந்தத் திட்டத்தின் மூலம், இந்தியாவில் ஆண்டுக்கு 6,000 டன் அரிய பூமி காந்தங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட தொழிற்சாலைகளை உருவாக்கப் போகிறோம். இதற்காக, அரசு ஐந்து பெரிய உற்பத்தி ஆலைகளை அமைக்க இருக்கிறது. இந்தத் தொழிற்சாலைகளை அமைக்கும் நிறுவனங்களுக்கு, அரசு மானியமும், விற்பனைக்கு ஊக்கத்தொகையும் வழங்கும்.
தற்போது, இந்தியாவுக்கு ஆண்டுக்கு 4,000 டன் காந்தங்கள் தேவைப்படுகின்றன. 2030-ல் இது 8,000 டன்களாக அதிகரிக்கும். இந்தத் தேவையை இனி உள்நாட்டிலேயே பூர்த்தி செய்வதன் மூலம், பாதுகாப்பு, ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ் என பல துறைகளில் இந்தியா தன்னிறைவு அடையும்.