ஒரு நூற்றாண்டு பின்னோக்கிப் போகிறோம்…..ஏன் தெரியுமா..?

204
Advertisement

உலகமே 22 ஆம் நூற்றாண்டை நோக்கி முன்னேற்றப்
பாதையில்தானே செல்ல வேண்டும்…..ஆனால், 20 ஆம்
நூற்றாண்டின் தொடக்கத்தை நோக்கிப் பயணித்துக்
கொண்டிருக்கிறோம்.

ஏன் தெரியுமா……எந்த விஷயத்தில் தெரியுமா?

தொழில்நுட்பப் புரட்சியும் கம்ப்யூட்டர், செல்போன்
போன்ற தகவல் தொழில்நுட்ப சாதனங்களின் கண்டுபிடிப்பும்
உலகத்தையே உள்ளங்கைக்குள் கொண்டுவந்துவிட்டன.

அந்த வகையில் போக்குவரத்து சாதனங்களின் அபரிமிதமான
வளர்ச்சியும் சேர்ந்துகொண்டது- இதற்கு உறுதுணையாக 1900களில்
நிகழ்ந்த பெட்ரோல் கண்டுபிடிப்பும் அமைந்தது.

அதேசமயம், இன்னும் 30 முதல் 40 ஆண்டுகளுக்குள்
பூமிக்கடியிலுள்ள பெட்ரோல் தீர்ந்துபோய்விடும் என்று
கணிக்கப்பட்டுள்ளது. அதனால், உலகின் பெரும்பாலான நாடுகள்
மாற்று வழியைப் பின்பற்றத் தொடங்கிவிட்டன.

பெட்ரோலில் இயங்கும் வாகனங்களுக்குப் பதிலாக
பேட்டரியால் இயங்கும் வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு
இயக்கப்பட்டு வருகின்றன.

தற்போது சாலையில் குறிப்பிடத்தக்க வகையில்
எலக்ட்ரிக் டூவீலர்கள், கார்கள் இயங்குவதையும் நாம்
பார்த்துவருகிறோம். எலக்ட்ரிக் பேருந்துகளையும் பெருநகரங்களில்
பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

ஆனால், இதற்கெல்லாம் முன்னோடியாக 190களிலேயே
எலக்ட்ரிக் கார்கள் பயன்பாட்டில் இருந்துள்ளதற்கான
படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டு
வைரலாகி வருகிறது. மீண்டும் பின்னோக்கித் திரும்புகிறோம்
என்பதற்கான அடையாளமாக இது அமைந்துள்ளது.

இதேநிலை தொடர்ந்தால் மாட்டு வண்டி, குதிரை வண்டி,
வில்வண்டி போன்ற வாகனங்களும் மீண்டும் பயன்பாட்டுக்கு
வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.