Wednesday, December 17, 2025

ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் : ராகுலுக்கு வந்த சிக்கல்

கடந்த 2018 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, அப்போதைய பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை குறித்து தெரிவித்த கருத்துக்களுக்கு பாஜகவில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து ஜார்க்கண்ட் மாநிலம் சாய்பாசாவில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ராகுலுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

பலமுறை சம்மன் அனுப்பியும், வழக்கில் நேரில் ஆஜராகாமல் ராகுல் இருந்துள்ளார். இந்நிலையில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரிய ராகுலின் மனுவையும் நீதிமன்றம் நிராகரித்தது. மேலும் ஜாமினில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்து, ஜூன் 26 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டது.

Related News

Latest News