Monday, January 19, 2026

டிரம்பை கதறவிட்ட வார்னிங்! ‘இந்தியா உடனான நட்பை பிரிக்கவே முடியாது!’ அமெரிக்காவை அழவிட்ட ரஷ்யா

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார். உக்ரைன் போரைக் கட்டுப்படுத்த முடியாததால் ரஷ்யா மீது அவர் கோபம் கொண்டு, அதனை ஆதரிக்கும் நாடுகளை குறிவைக்கிறார். குறிப்பாக இந்தியா மற்றும் சீனா, ரஷ்ய எண்ணெய் வாங்குவதால் போர் நீடிக்க உதவுகிறது என அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதற்காக, அதற்காக என்று காரணம் காட்டி இந்தியா மீது 50% வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்தியா எந்த அழுத்தத்தையும் பொருட்படுத்தாமல் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை அதிகரித்துள்ளது. இதனால் டிரம்ப் கவலையில் ஆழ்ந்துள்ளார். மேலும், ஐரோப்பிய மற்றும் நேட்டோ நாடுகளையும் இந்தியா–சீனாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிறார்.

இந்த சூழலில், ரஷ்ய வெளியுறவுத்துறை கடுமையான கண்டனத்துடன் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா–ரஷ்யா உறவை சிதைக்க யாராலும் முடியாது எனவும், அமெரிக்கா மற்றும் நேட்டோ எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் இந்தியா உறுதியுடன் நிற்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கிடையேயான நட்பு பல ஆண்டுகளாக வலிமைபெற்று வருவதாகவும், வர்த்தகம், கலாசாரம், நலன்கள் என பல துறைகளில் இந்த உறவு வேரூன்றி இருப்பதாகவும் ரஷ்யா தெரிவித்தது.

ரஷ்யா மீது இந்தியா கொண்ட நம்பிக்கை, இந்தியா மீது ரஷ்யா கொண்ட நம்பிக்கை ஆகியவை இந்த உறவை வலுப்படுத்துகிறது. இதனால் அமெரிக்கா அதிருப்தியடைந்து, இந்தியா எண்ணெய் இறக்குமதியை நிறுத்த வேண்டும் என தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது. இருந்தாலும் இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றாமல் ரஷ்யாவுடனான உறவைத் தக்கவைத்துக் கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News