அண்ணா பல்கலைக்கழகத்தில் இலவசமாக B.E. பட்டப்படிப்பை தொழிற்பயிற்சியுடன் செய்யும் வாய்ப்பு தற்போது காத்திருக்கிறது! இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் தலைசிறந்த மாநில பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகம், 2025-26 கல்வி ஆண்டிற்கு மாணவர் சேர்க்கையை தொடங்கி விட்டது. இதன் மூலம், மாணவர்களுக்கு இலவசமாக B.E. பட்டப்படிப்பு பெறும் சிறந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இந்த படிப்பு, தனியார் நிறுவனம் ஆன HL Mando Anand India உடன் இணைந்து, காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் நடைபெறும். இந்த படிப்பின் முக்கிய அம்சம், மாணவர்கள் கல்லூரி வகுப்புகளையும், தொழிற்பயிற்சியையும் ஒருங்கிணைந்த முறையில் அனுபவிக்க முடியும். எலெக்ட்ரானிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொறியியல் துறையில் இந்த படிப்பு வழங்கப்படுகிறது.
அந்த நிறுவனத்திலிருந்து மாணவர்களுக்கு பயிற்சி பெறும் போது, அவர்களுக்கு மாதம் ரூ.14,500 உதவித்தொகையும் வழங்கப்படும். அந்த நிறுவனத்திலேயே மருத்துவ காப்பீடு, விடுதி வசதி, போக்குவரத்து வசதி, உணவு மற்றும் மருத்துவக் காப்பீடு எல்லாம் நிதியுதவியாக வழங்கப்படும்.
இதில் முக்கியமாக, மாணவர்களுக்கு எந்தவொரு நுழைவுத் தேர்வும் அவசியம் இல்லை.அவர்களுடைய டிப்ளமோ மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் . தற்போது, இந்த வாய்ப்புக்கான விண்ணப்பம் ஆன்லைனில் மட்டுமே எடுக்கப்படுகிறது. அதன் மூலம், நீங்கள் இவ்வாய்ப்பை பெற விரும்பினால், திரையில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப் பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
LINK- https://cfa.annauniv.edu/cfa/beintegrated.html
இந்த படிப்பில் சேர விரும்புவோர், மின்பொறியியல், கணினி அறிவியல், இயந்திர பொறியியல் போன்ற துறைகளில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். இந்த படிப்பு 4 ஆண்டு கால பயிற்சி முறையில் அமைந்துள்ளது,திங்கள் முதல் வெள்ளி வரை இரு சிப்ட் வகுப்புகள் நடைபெறும்.
முதலில், இந்த வாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களிடமிருந்து ரூ.500 விண்ணப்பக் கட்டணம் பெறப்படுகிறது. ஆனால், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான கட்டணம் ரூ.250 தான். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, நீங்கள் உலகளாவிய தொழில்நுட்பத்தில் ஒரு வெற்றிகரமான வாழ்க்கையைத் தொடங்க முடியும்.
இந்த படிப்புக்கான விண்ணப்பம் ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கியது. மேலும், விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி 30.06.2025 ஆகும். நீங்கள் இந்த வாய்ப்பை தவற விடக்கூடாது. விரைந்து விண்ணப்பித்து உங்கள் கனவுகளை நினைவாக்குங்கள்!
மிகவும் சிறந்த வாய்ப்பு இது, இப்போதே விண்ணப்பித்து விடுங்கள்!!!