நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்தாண்டு ஆண்டு டிசம்பர் மாதம் 28ம் தேதி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும் கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் திரண்டனர்.
இதனிடையே விஜயகாந்த் நினைவிடத்துக்கு அமைதிப்பேரணி நடத்த தமிழக அரசிடம் தேமுதிக கோரிக்கை வைத்த நிலையில், அனுமதி மறுக்கப்பட்டதால், தடையை மீறி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில், பேரணி நடைபெற்றது.
பேரணி முடிந்த பின்னர் விஜயகாந்த் நினைவிடத்தில், அவரது மனைவி பிரேமலதா கண்ணீர் மல்க மலர்தூவி மரியாதை செலுத்தி, உறுதிமொழி ஏற்று கொண்டார். தேமுதிகவின் அழைப்பை ஏற்று அரசியல் தலைவர்கள் பலரும் விஜயகாந்த் நினைவிடத்திற்கு வருகை தந்தனர்.