2026-ம் ஆண்டு தேர்தலை முன்னிட்டு பூத் கமிட்டியை பலப்படுத்தும் பணியில் விஜய் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். முதல்கட்டமாக கொங்கு மண்டல பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான மாநாடு இன்றும், நாளையும் கோவையில் நடக்கிறது.
இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக கோவைக்கு வந்தார். கோவை விமான நிலையம் வந்த விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொண்டர்கள் அதிகமாக கூடியதால் விமான நிலையமே ஸ்தம்பித்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து விஜய் கோவையில் ரோடு ஷோ நடத்தினார். அப்போது திடீரென தொண்டர் ஒருவர் பிரச்சார வாகனத்தில் எறி விஜய்க்கு ஷாக் கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.