Tuesday, July 29, 2025

அமெரிக்காவில் 1000 மீட்டர் உயரத்துக்கு வெடித்துச் சிதறிய எரிமலை

அமெரிக்காவின் ஹவாய் தீவில் கிலாவியா எரிமலை சமீப காலமாக அடிக்கடி வெடித்துச் சிதறுகிறது. இந்நிலையில், கிலாவியா எரிமலை பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.

அப்போது எரிமலையில் இருந்து சுமார் 1,000 அடி உயரத்துக்கு தீக்குழம்புகள் வெளியேறின. அதில் இருந்து வெளியேறிய சாம்பல் அருகில் உள்ள ஹலேமா தேசிய பூங்கா வழியாக பாய்ந்தது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த தேசிய பூங்கா மூடப்பட்டது. மேலும் எரிமலையைச் சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News