Wednesday, July 2, 2025

சென்னையில் 5G சேவையை அறிமுகப்படுத்தியது வோடபோன் ஐடியா நிறுவனம்

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் 4ஜி சேவைக்கு பிறகு 5ஜி சேவையை வழங்குவதற்காக பணிகளில் தீவிரமாக இறங்கின. ஆனால், ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களின் போட்டிக்கு மத்தியில் வோடபோன் ஐடியா நிறுவனத்தால், 5ஜி சேவை உடனடியாக வழங்க முடியவில்லை. இதனால் அந்நிறுவனம் பல வாடிக்கையாளர்களை இழந்தது.

இந்நிலையில் வோடபோன் ஐடியா நிறுவனம் 5G சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட 17 நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் பெருங்குடி, நெசப்பாக்கம் பகுதிகளில் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் 5ஜி சேவைகள் கிடைக்க இருக்கிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news