Wednesday, December 17, 2025

திடீரென பிரதமர் மோடியை புகழ்ந்து தள்ளிய விஷால்! இதான் காரணமா?

முன்னதாக, தனது நண்பரும் நடிகருமான நந்தா மற்றும் தனது குடும்பத்தினருடன் காசிக்கு ஆன்மீக யாத்திரை சென்றுள்ளதாக விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

அதன் பிறகு, அன்புள்ள மோடிஜி என தொடங்கும் பதிவில், காசியை சிறப்பாக மறு சீரமைப்பு செய்துள்ளதாக குறிப்பிட்டு, இவ்வளவு அழகாக புனரமைத்ததற்கு நன்றி என தனது பாராட்டுக்களை விஷால் பதிவு செய்திருந்தார்.

மேலும், hats off, salute you என்று குறிப்பிட்டிருந்த விஷால் கடவுள் உங்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார். விஷாலின் இந்தப் பதிவு சமூகவலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.

Related News

Latest News