இந்திய பாஸ்போர்ட்டுக்கு அங்கோலா, தாய்லாந்து, நேபாளம், பூடான், மலேசியா, மாலத்தீவு, செர்பியா உள்பட 26 நாடுகள் விசா இல்லாத நுழைவை வழங்குகின்றன. 40 நாடுகள் “ஆன்-அரைவல்” வசதியை வழங்குகிறது.
நேபாளம், பூடான் மற்றும் மாலத்தீவுகளின் குடிமக்களுக்கு விதிகளுக்குட்பட்டு விசா இல்லாத நுழைவை இந்தியா வழங்குகிறது என்று வெளியுறவு விவகாரங்கள் இணை அமைச்சர் கீர்த்தி வர்தன்சிங் தெரிவித்துள்ளார். ஆன்-அரைவல் விசா நாடுகள், வெளியுறவு அமைச்சகத்தின் பட்டியலில் இ-விசாவை பயன்படுத்தி 58 நாடுகளுக்கு பயணிக்கலாம் என கூறியுள்ளார்.