Friday, May 16, 2025

”ஒழுங்கா வாபஸ் வாங்குங்க” மிரட்டிய BCCIக்கு விராட்டின் ‘Thug Reply’

முக்கிய வீரர்கள் திடீர் ஓய்வு, IPL நிறுத்தம் என BCCIக்கு இது போதாத காலமாக இருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் அடுத்தடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்து, ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளனர்.

கேப்டனாக அணியை வழிநடத்திய ரோஹித் சர்மாவை விட, விராட்டின் ஓய்வு தான் அனைவருக்கும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனானப்பட்ட BCCIயே விராட்டின் ஓய்வு அறிவிப்பால் ஆடிப்போய் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் King என்னும் அடைமொழிக்கேற்ப, டெஸ்ட் கிரிக்கெட்டின் ராஜாவாகவே வலம் வந்தவர் கோலி.

களத்தில் இவரின் ஆக்ரோஷமும், வெற்றிக்காக வெறிகொண்டு ஆடுவதும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டை சர்வதேச அரங்கில் தூக்கிப் பிடிக்க காரணமாக அமைந்தன. 36 வயதானாலும் கூட, கோலி இன்னும் Fitness ஆக உடலை வைத்திருக்கிறார். இதனால் குறைந்தது 2027ம் ஆண்டு உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் வரை, விராட் விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

ஆனால் BCCI தன்னை பந்தாடும் முன், தானே ஓய்வை அறிவித்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த கோலி, BCCIயின் கெஞ்சல்களை காதில் வாங்காமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலகி விட்டார். இந்திய டெஸ்ட் அணியில் 4வது இடத்திற்கு, உருப்படியான பேட்ஸ்மேன்கள் யாரும் தற்போது அணியில் இல்லை.

இதனால் தான் ரோஹித்தை லெப்ட் ஹேண்டில் டீல் செய்த BCCI, விராட்டிடம் விடாமல் கெஞ்சி வருகிறது. இந்தநிலையில் விராட்டுக்கு, BCCI அண்மையில் கடிதம் எழுதியுள்ளது. அதில், ”இந்த இங்கிலாந்து டெஸ்டில் மட்டுமாவது ஆடுங்கள்,” என்று கேட்டுக்கொண்டதாம்.

பதிலுக்கு விராட், ” எனது Fitness முன்புபோல இல்லை. இதனால் தான் ஓய்வு அறிவித்தேன். என்னுடைய இந்த முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை,” என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டாராம். இதனால் விராட் மீது BCCI எக்கச்சக்க காண்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

Latest news