கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரராக பார்க்கப்படும் விராட் கோலி, ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்கள், அதிவேகமாக 12,000 ரன்கள், டி20 கிரிக்கெட்டில் முதல்வீரராக 4000 ரன்கள் என பல்வேறு உலக சாதனைகளை தன்வசம் வைத்துள்ளார்.
இந்நிலையில் மேலும் ஒரு உலக சாதனையை படைத்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் படைத்துள்ளார் கிங் கோலி. பாகிஸ்தானுக்கு எதிராக 15 ரன்களை அடித்த விராட் கோலி, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 14,000 ரன்கள் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
பேட்டிங்கை கடந்து தன்னுடைய அபாரமான ஃபீல்டிங்கிலும் புதிய சாதனையை படைத்து அசத்தியுள்ளார் விராட் கோலி.