உத்தரபிரதேசம் மாநிலம் புலந்த்சர் அருகே குா்ஜா பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இந்நிலையில் அந்த பள்ளியில் ஆசிரியை வகுப்பறையில் உட்கார்ந்து பாடல் கேட்டபடி தலைமுடியை விரித்து போட்டு தலைக்கு எண்ணெய் தேய்த்துள்ளார். மேலும் பள்ளி மாணவிகளை தனது சொந்த வேலைக்கு பயன்படுத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது.
இதையடுத்து பள்ளி வகுப்பறையில் பாடம் நடத்தாமல் அலட்சியமாக செயல்பட்ட ஆசிரியை பணி இடைநீக்கம் செய்து மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.