பாம்புடன் விளையாடும் செல்லச்சிறுமி வைரல் வீடியோ

249
Advertisement

பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்ற கூற்று உள்ளது. அப்படி பாம்பை பார்த்து பலரும் நடுங்கும் போது சிறுமி ஒருவர் பாம்பு உடன் விளையாடுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று பதிவிட்டப்பட்டுள்ளது. அதன்படி அரைனா என்ற சிறுமி ஒருவர் பெரிய பாம்பு ஒன்றுடன் விளையாடும் காட்சிகள் வேகமாக வைரலாகி வருகிறது.

அரைனா சிறு வயது முதல் பாம்புகள் மீது அதிக ஆர்வம் கொண்டவராக இருந்து வருகிறார் . ஆகவே அவருக்கு சிறு வயது முதல் பாம்புகளை கண்டால் பயம் எதுவுமில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் அவர் பெரிய ரக பைதான் பாம்பு ஒன்றுடன் விளையாடும் வீடியோவை ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிட்டு அரைனா சிறுமி பாம்புடன் மகிழ்ச்சியாக விளையாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

https://www.instagram.com/reel/CagDugKDcH8/?utm_source=ig_embed&ig_rid=49675111-f4db-4145-b8d0-f3ed5d9f4118

இந்த வீடியோவை தற்போது வரை 50 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். அத்துடன் 50 ஆயிரம் பேர் வரை இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர். இந்த வீடியோ தொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். முன்னதாகவே , இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு போட்டப்பட்டிருந்தது. அதில் பாம்பின் அருகே இந்த சிறுமி படுத்து கொண்டு எங்கள் இருவரில் யார் உயரம் என்று கேட்கும் வகையில் ஒரு படம் இருந்தது. அந்தப் படமும் பலரிடம் மிகவும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.