வைரலாகும் பியானோ கிரில் பர்பிக்யூ சிக்கன் வீடியோ

233
Advertisement

பியானோ இசைக்கருவியைக் கிரில்லாக மாற்றி, சிக்கனை சமைக்கும் வீடியோ சமூக ஊடகத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.

பாத்திரத்தில் சமைக்கப்படும் இறைச்சியைவிட தீயில் சுடப்படும் இறைச்சியை, மாமிசப் பிரியர் விரும்பிச் சாப்பிடுகின்றனர். பல்லாண்டுகளாக வழக்கத்தில் உள்ள பர்பிக்யூ என்று அழைக்கப்படும் இந்த சமையல் முறை உலகம் முழுவதும் பரவியுள்ளது.

தற்போது, அதில் ஒரு புதுமையைப் புகுத்தியுள்ளார் சீனாவைச் சேர்ந்த ஹேண்டி ஜெங் என்னும் இளைஞர். இதற்காக, கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பியானோ இசைக்கருவியைக் கிரில்லாக மாற்றினார்.

பின்பு, அதில் சிக்கனை சமைத்துக்காட்டி, வலைத்தளங்களில் அந்த வீடியோவைப் பகிர்ந்தார். அவரது புதுமையான செயல் நெட்டிசன்களைக் கவர்ந்தது. தற்போது வலைத்தளங்கள் முழுவதும் பியானோ பர்பிக்யூ சிக்கன் வீடியோ வலம்வரத் தொடங்கிவிட்டது.

ஒரு பர்பிக்யூ கிரிலைப் பியானோவுடன் இணைத்து சமைக்கவும், அதேநேரத்தில் இசையை உருவாக்கவும் முடியும் என்று யாரும் கற்பனை செய்திருக்க மாட்டார்கள். ஆனால், ஹேண்டி ஜெங், சமைப்பது, இசைப்பது, இயங்குவது ஆகிய 3 செயல்களையும் ஒருங்கிணைத்து அசத்தியுள்ளார்.