ஹார்லி டேவிட்சன் வண்டியில் பால் சப்ளை! வைரலாகும் பணக்கார பால்காரர்

62
Advertisement

ஒரு காலத்தில் சைக்கிளில் வீடு வீடாக சென்று பால் விநியோகித்து வந்த பால்காரர்கள் நாளடைவில் பரவலாக பஜாஜ் எம்80 வண்டியை பயன்படுத்த தொடங்கினார்கள்.

இதனாலேயே, பஜாஜ் எம்80 பால்காரர்களின் வண்டி என்ற பெயரை பெற்றது. அதற்கு பிறகு பால்காரர்கள் பல விதமான பைக்குகளையும் பயன்படுத்த தொடங்கி விட்டாலும் கூட, ஹார்லி டேவிட்சன் வண்டியில் வலம் வரும் பால்காரர் ஒருவர் நாடு முழுவதும் கவனம் ஈர்த்துள்ளார்.

குறைந்த பட்சமாக 4.70 லட்ச ரூபாய் மற்றும் அதிகபட்சமாக 5.50 லட்ச ரூபாயும் விலையாக கொண்ட ஹார்லி டேவிட்சன் street 750 ரக மாடலை தான் இந்த பால்காரர் பயன்படுத்துகிறார்.

Advertisement

விலையுயர்ந்த பைக் ரகங்கள் இந்தியாவில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எடுபடவில்லை என்பதால் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்தியாவில் விற்பனையை ஏற்கனவே நிறுத்தி விட்டாலும், முன்னதாகவே வாங்கியவர்கள் மட்டுமே தற்போது இந்த வண்டியை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த பால்காரர் யாரென்பது பற்றிய தெளிவான விவரங்கள் வெளிவரவில்லை என்றாலும் இவரது பைக் நம்பர் plateஇல் குஜ்ஜார் என எழுதப்பட்டுள்ளது மட்டுமில்லாமல் நம்பர் எதுவும் காணப்படவில்லை. குஜ்ஜார் என்பது வட இந்திய ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பெயர் ஆகும்.

நம்பர் plateஇல் சமூகத்தின் பெயரை குறிப்பிடுவது சட்டப்படியான விதிமீறல் என்பதால் ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்களுக்காக இந்த பால்காரர் இணையத்தில் வைரலாகி வருகிறார் என்றே சொல்லலாம்.