Thursday, July 31, 2025

ஜெர்மனியில் புயல் காரணமாக நடுவானில் குலுங்கிய விமானம்

ஜெர்மனியில் புயல் காரணமாக விமானம் நடுவானில் குலுங்கியதால், அவசர, அவசரமாக தரையிறக்கப்பட்டது.

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் இருந்து ரியானேர் என்ற விமானம் இத்தாலியின் மிலன் நகரை நோக்கி புறப்பட்டது. விமானத்தில் 6 பணியாளர்கள் உள்பட 185 பேர் இருந்த நிலையில், நடுவானில் சென்றபோது பலத்த புயல் காற்று வீசியது. இதனையடுத்து விமானம் பயங்கரமாக குலுங்கியதால் பயணிகள் அச்சம் அடைந்தனர். பின்னர் பவேரியாவின் மெம்மிங்கன் அருகே, பத்திரமாக விமானம் தரையிறக்கப்பட்டதால் 185 பேரும் உயிர்தப்பினர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News