Sunday, December 28, 2025

இறந்துவிட்டதாக வாக்காளர் பட்டியல் இருந்து நீக்கப்பட்ட கிராமத்தினர் உயிருடன் வந்து புகார்

பீகார் மாநிலத்தில் கடந்த மாதம் வாக்காளர் பட்டியல்சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் முடித்தது. இதில் 3.66 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.

இந்நிலையில் பீகாரின் தோரையா தொகுதியின் கீழ் உள்ள பட்சர் கிராமத்தில் வசிக்கும் 5 பேர் தாங்கள் உயிரிழந்ததாக குறிப்பிட்டு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து அந்த 5 பேரும் தொகுதி மேம்பாட்டு அதிகாரியிடம் புகார் அளித்தனர். அதில் “ஐயா, நாங்கள் உயிருடன் உள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளனர். இதுதொடர்பாக விசாரிக்கப்பட்டு பிழை சரி செய்யப்படும் என அந்த அதிகாரி தெரிவித்தார்.

Related News

Latest News