Monday, December 23, 2024

15 நாட்களுக்கும் மேலாக குடிநீர் இல்லை – போராட்டத்தில் இறங்கிய மக்கள்

திருக்கோவிலூர் அருகே, முறையாக குடிநீர் கிடைக்காததால் கிராம மக்கள் காலிகுடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த வடமருதூர் கிராமத்தில், ஆதிதிராவிடர் மக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்துக்கு கடந்த 15 நாட்களுக்கு மேலாக முறையாக குடிநீர் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், திருக்கோவிலூர்-கடலூர் சாலையில் காலிகுடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற ஊராட்சி தலைவர் மலர்கொடி கிருஷ்ணமூர்த்தி பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

Latest news