Monday, December 29, 2025

ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம உதவியாளர் கைது

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா காக்கூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய ஆன்லைனில் விண்ணப்பம் செய்துள்ளார். இதற்காக 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கப்பட்டதால் அவர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

இதனையடுத்து, கிராம உதவியாளர் ராசையா லஞ்சப் பணத்தை பெற்ற போது, அவரை கையும்,களவுமாக பிடித்து போலீசார் கைது செய்தனர்.

Related News

Latest News