Tuesday, December 23, 2025

விஜயின் ‘ஜன நாயகன்’ – ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘ஜன நாயகன்’. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், மமிதா பைஜூ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அரசியலை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ‘ஜன நாயகன்’ படத்தின் டீசரை விஜய் பிறந்த நாளை முன்னிட்டு ஜுன் 22-ம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related News

Latest News