Wednesday, December 17, 2025

ஈரோட்டில் விஜய் பிரசாரம்: தனியார் பள்ளிக்கு நாளை விடுமுறை

விஜய் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் ஈரோடு மாவட்டத்தில் நாளை (17-12-2025) பெருந்துறை அருகே விஜயமங்கலம் சரளை பகுதியில் உள்ள மைதானத்தில் நடக்கிறது. பிரசார கூட்டத்தையொட்டி 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

இந்த நிலையில், த.வெ.க. பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானம் அருகே பிரபல தனியார் பள்ளிக்கூடம் உள்ளது. பொதுக்கூட்டம் காரணமாக அந்த பகுதியில் வாகன நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால், அந்த பள்ளிக்கூடத்துக்கு மட்டும் நாளை (வியாழக்கிழமை) ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது அரையாண்டு தேர்வு நடந்து வருவதால், நாளை நடக்க இருந்த தேர்வு 26-ந் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News