முதல் நாளே விஜய்யின் பிரச்சாரம் ரத்து : காரணத்தை சொன்ன தவெக

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்றைய தினம் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக அங்கு சென்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து அவர் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.

கொளத்தூரில் 4 நிமிடங்கள் மட்டுமே பிரச்சாரம் மேற்கொண்டார் விஜய். மேலும் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு வில்லிவாக்கம் பிரச்சாரத்தை ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், இதுகுறித்து தவெக தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது :

இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்களது தமிழகம் முழுவதற்குமான முதற்கட்ட பிரசாரமாக சென்னை பெரம்பூரில் துவங்கப்பட்ட நிலையில், அங்கே நடந்த வேட்புமனுத் தாக்கல் மற்றும் பிரசாரத்திற்குச் செயல்படுத்தப்பட்டதுபோல, தன்னிச்சையாக இந்த பிரச்சாரங்களுக்குக் கலந்துகொள்ள வரும் பொதுமக்களுக்கும் அந்த இடங்களுக்குச் செல்லும் வழிகளில் தன்னிச்சையாகத் திரளும் பொதுமக்களுக்கும் சரியானப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து முறைப்படுத்துதல், முன்னெச்சரிகை நடவடிக்கைகளைக் கொளத்தூர் மற்றும் வில்லிவாக்கம் தொகுதி தெருமுனைப் பிரசார கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் மட்டுமல்லாமல், அங்கே செல்வதற்கான வழிகளிலும் சென்னைப் பெருநகர காவல்துறை செயல்படுத்தாததால் தமிழக வெற்றிக் கழக தலைவர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வில்லிவாக்கம் தொகுதி தெருமுனைப் பிரசாரக் கூட்டத்தை ரத்து செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related News

Latest News