தன்னுடைய கண்ணீர் சீமானை சும்மா விடாது என சாபம் விட்டு நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டுள்ளார்.
நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், விஜயலட்சுமியை அருவருக்கத்தக்க வகையில் ஆபாசமாக பேசியதாக கடும் எதிர்ப்புகள் எழுந்திருக்கின்றன. இந்நிலையில், வீடியோ வெளியிட்டிருக்கும் விஜயலட்சுமி, தான் பாலியல் தொழிலாளியா? என கேள்வி எழுப்பி கண்ணீர் விட்ட நிலையில், தன்னுடைய கண்ணீர் இனி சீமானை சும்மா விடாது எனவும் சாபம் விட்டுள்ளார்.