மறைந்த விஜயகாந்தின் ’கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ள நிலையில், அப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் மேடையில் பேசும்போதே கண்கலங்கினார்.
விஜயகாந்தின் 100வது படமான ’கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம் 1991ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. விஜயகாந்தை கேப்டன் என்று அழைப்பதற்கு இப்படமே முழுமுதற் காரணம் ஆகும்.
இந்நிலையில் இந்த படம், விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 22ஆம் தேதி ரீ-ரிலீஸாகிறது. இந்த நிலையில் இப்படத்திற்கான டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் விஜய பிரபாகரன் பேசுகையில், அப்பா இறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. இன்றும் அழுதுகொண்டிருக்கிறார் என கிண்டல் செய்கிறார்கள். என் உயிர் போகும்வரை அழுவேன். அப்பாவை நினைத்து நான் தினம் தினமும் அழுவேன். அதில் எனக்கு எந்த அவமானமும் இல்லை” என எமோஷனலாக பேசினார்.