Wednesday, March 26, 2025

“எல்லோரும் சேர்ந்துதான் திமுக அரசை தேர்ந்தெடுத்தோம். ஆனால்” : வீடியோ வெளியிட்ட விஜய்

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினமாக (சர்வதேச மகளிர் தினம் 2025) கொண்டாடப்படுகிறது. உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மகளிர் தினத்தை முன்னிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது : “தமிழ்நாடு முழுவதும் உள்ள என்னுடைய அம்மா, அக்கா, தங்கை , தோழி என உங்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள். பாதுகாப்பா இருந்தால்தானே சந்தோசத்தை உணரமுடியும். எந்த பாதுகாப்பும் இல்லாதபோது எப்படி சந்தோசத்தை உணர முடியும்.

நாம் எல்லோரும் சேர்ந்துதான் திமுக அரசை தேர்ந்தெடுத்தோம். ஆனால் அவர்கள் நம்மை ஏமாற்றுவார்கள் என்பது போதுதானே தெரிகிறது. மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய இந்த அரசை மாற்றுவோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

Latest news