தமிழக வெற்றிக்கழகம் கட்சியை ஆரம்பித்துள்ள விஜய், 2026 தேர்தலுக்கு தயாராகும் வகையில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் தீவிர சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இதற்கிடையே ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து வருகிறார்.
திருச்சி மற்றும் அரியலூரில் முதல் வாரம் பரப்புரை செய்த விஜய், இரண்டாவது திருவாரூர் மற்றும் நாகப்பட்டினத்தில் பரப்புரை செய்தார். இன்று நாமக்கல் மற்றும் கரூர் பகுதிகளில் பரப்புரை செய்கிறார்.

இதற்காக விஜய் சென்னையில் இருந்து பிரைவேட் ஜெட் எனப்படும் சிறிய ரக தனி விமானத்தில் தான் பயணம் செய்தார். விஜய் பயன்படுத்தும் VT-PCR – Gulfstream G200 என்ற தனி விமானத்தின் மதிப்பு ரூ. 8 கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தனி விமானத்தின் ஒருநாள் வாடகையாக ரூ. 14 லட்சம் வரை கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சென்னையில் இருந்து திருச்சிக்கு கிட்டத்தட்ட 38 நிமிடங்களில் செல்லும் என கூறப்படுகிறது.