விஜய்யின் வளர்ச்சி பயணம் : ‘நாளைய தீர்ப்பு’ to ‘தளபதி 66’

2419
Advertisement

நடிகர் விஜய்யின் 48வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் வழக்கம் போல வித விதமாக கொண்டாட திட்டமிட்டு வருகிறார்கள்.

சினிமாவில் இளைய தளபதி என்ற பட்டத்தில் இருந்து தளபதி ஆக உயர்ந்து நிற்கும் விஜய்யை, ரசிகர்கள் பாசமாக கூப்பிடுவது என்னவோ, அண்ணா என்று தான்.

குடும்பத்தில் ஒருவராக நினைக்க வைக்கும் தோற்றம், யதார்த்தமான நடிப்பு, இயல்பான நகைச்சுவை உணர்வு, அசாத்தியமான நடன திறனை கொண்டு ரசிகர்களை கவர்ந்தது மட்டுமின்றி, தனது படங்கள் ஈட்டும் வசூலினால் தயாரிப்பாளர்களும் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக தமிழ் சினிமாவில் தடம்  பதித்துள்ளார் விஜய்.

ஆனால், இந்த நிலையை அடைய அவர் கடந்து வந்த பாதை மிகவும் கடினமானது.

தனது 10 வயதில் ‘வெற்றி’ என்ற படத்தில் நடித்த விஜய் உட்பட வேறு யாருமே யோசித்து இருக்க மாட்டார்கள், விஜய் படங்களின் வெற்றி வாடிக்கையாக மாறும் என.

காரணம், அப்போதைக்கு இயக்குநரின் மகனாக மட்டுமே பார்க்கப்பட்ட விஜய்க்கு நடிகராக அங்கீகாரமோ பெரிய வரவேற்போ கிடைக்கவில்லை.

தனது 18வது வயதில் விஜய் நடித்து 1992ஆம் ஆண்டு வெளிவந்த நாளைய தீர்ப்பு திரைப்படம் கடுமையான விமர்சனங்களை பெற்றது.

தேவாங்கு போல இருக்கிறார் என்றும் இந்த முகத்தை காசு கொடுத்து தியேட்டர்ல பாக்கணுமா என்றும் பிரபல பத்திரிகைகள் காட்டமாக விமர்சித்தன.

பின்னர், பூவே உனக்காக, நினைத்தேன் வந்தாய், காதலுக்கு மரியாதை என்ற காதல் படங்களில் கமிட் ஆன விஜய்க்கு இளைஞர்களிடம் வரவேற்பு கிடைத்தது. பிரியமுடன் படத்தில் நெகடிவ் ரோலில் நடித்து கவனம் ஈர்த்து பின் திரும்பவும் மின்சார கண்ணா, குஷி, ஷாஜஹான், துள்ளாத மனமும் துள்ளும், சச்சின் போன்ற feel-good படங்களின் மூலம் குடும்ப ரசிகர்களை கைப்பற்றிய விஜய் வெற்றி பாதையில் அடியெடுத்து பயணிக்க துவங்கி விட்டார்.

விஜய்யின் உருவத்தை வைத்து கேலி செய்த அதே பத்திரிகைகள் அவரை கொண்டாட ஆரம்பித்து விட்டதே அதற்கு சான்று.

 திருப்பாச்சி, சிவகாசி, திருமலை என ஆக்சனில் இறங்கி, பின் வில்லு, சுறா போன்ற படங்களில் தொடர்ந்து flop கொடுத்த விஜய்க்கு காவலன் படம் கை கொடுத்தாலும், துப்பாக்கி படமே முறையான comeback ஆக அமைந்தது.

அதன் பிறகு வந்த கத்தி, மெர்சல், சர்கார், பிகில், மாஸ்டர் என அடுத்தடுத்த படங்கள் கோடிகளில் வசூலை குவித்த வெற்றி படங்களாக அமைந்த நிலையில், கடைசியாக வெளியான beast படம் விமர்சன ரீதியாக அதிருப்தி அளித்தது.

இந்நிலையில், ரசிகர்களின் மொத்த கவனமும் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 66 மீது திரும்பியுள்ளது. ராஷ்மிகா மண்டாணா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் பிரபு, பிரகாஷ் ராஜ், சரத் குமார், ஷாம், ஜெயசுதா என ஒரு நட்சத்திர பட்டாளமே உள்ளது.

நாளை விஜய்யின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக படக்குழுவினர், தளபதி 66இன் first lookஐ இன்று First look update போஸ்டரில் வெளியாகி இருக்கும் விஜய்யின் தோற்றம், படத்தை பற்றிய எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.

தளபதி 66 படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.