மாணவர்களுக்கு வேற லெவல் SURPRISE கொடுக்கும் விஜய்! மகிழ்ச்சியில் பெற்றோர்..!

22
Advertisement

பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து, நடிகர் விஜய் தரப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பு மாணவர்களையும் பெற்றோரையும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற 1500 மாணவர்களை சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வரும் விஜய் 70வது படத்தை முடித்துக் கொண்டு, முழு நேர அரசியலில் ஈடுபடப் போவதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்த கூற்றுக்கு வலுசேர்க்கும் வகையில், விஜய் மக்கள் இயக்கத்தினர் முழு அரசியல் தலைவர்களின் சிலைகளுக்கு மரியாதையை செய்வது என தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு தொகுதியிலும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோரை இழந்து அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் பெயர்ப் பட்டியல் தயாராகி வருகிறது. ஜூன் மாதம் நடைபெற உள்ள இந்த சந்திப்பிற்கு ஸ்ரீவாரி வெங்கடேஸ்வரா திருமண மண்டபம், நந்தம்பாக்கம் வர்த்தக மையம், நீலாங்கரையில் உள்ள ஆர் கே திருமண மண்டபம் மற்றும் புழல் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபம் ஆகிய இடங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.