Friday, January 3, 2025

ரசிகர் மன்ற செயலாளர் செய்த அதிர்ச்சி செயல்! கடுமையாக எச்சரித்த விஜய்

அடுத்தடுத்த அப்டேட்களுடன் ஒரு பக்கம் வாரிசு படம் பொங்கல் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், விஜய் தனது ரசிகர்களை சந்தித்த நிகழ்வு பரபரப்பாக பேசப்பட்டது.

உறுப்பினர் அட்டை வைத்திருந்த பல ரசிகர்களுடன் விஜய் பொறுமையாக புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இதற்கிடையே, விஜய் ரசிகர் மன்ற செயலாளர் bussy ஆனந்திடம் சில ரசிகர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கும் வீடியோ வைரலாகியது. இந்த சம்பவம் பெரும்பான்மை விஜய் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தததை அடுத்து, இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு விஜய் bussy ஆனந்தை எச்சரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  

கொண்டாட்டமாக  நடந்து முடிந்த ரசிகர் சந்திப்பு விழாவில் நடைபெற்ற இந்த சம்பவம் சமூகவலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Latest news