Monday, September 8, 2025

“விஜய் அதற்கு தகுதியானவர்.. ” நடிகை த்ரிஷா ஓப்பன் டாக்!

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், தனது கட்சியை பலப்படுத்தும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார் விஜய். தேர்தல் தொடர்பான பணிகளில் கவனம் செலுத்த வருகிறார். மேலும், செப். 13 தேதி முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் அரசியலுக்கு வருவதால் இவருடைய கடைசி திரைப்படம் ஜனநாயகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், South Indian International Movie Awards நிகழ்ச்சி ஒன்றில் நடிகை த்ரிஷாவிடம் நடிகர் விஜய்யின் புகைப்படம் காட்டப்பட்டது. அப்போது இதனை பார்த்து ரசிகர்கள் அரங்கம் அதிரும் அளவிற்கு ஆரவாரம் செய்தனர்

இதன் பின்னர் த்ரிஷா பேசியதாவது, “விஜய்யின் புதிய பயணத்திற்கு வாழ்த்துகள். அவரது கனவுகள் எதுவாக இருந்தாலும் அனைத்துமே நிறைவேறட்டும். ஏனெனில், அவர் அதற்குத் தகுதியானவர்” எனக் கூறியுள்ளார்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல், சிவகார்த்திகேயன் இதைப் பார்த்து சிரித்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

நடிகர் விஜய்யுடன் த்ரிஷா, கில்லி, ஆதி, திருப்பாச்சி, குருவி, லியோ திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு த்ரிஷா நடனமாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News