தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அடுத்த ஆண்டு (2026) நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான முன்னேற்பாடு பணிகளை செய்து வருகிறார்.
அதன்படி கடந்த 26, 27 தேதிகளில் த.வெ.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கு கோவையில் நடைபெற்றது. இந்நிலையில் நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய், ஜனநாயகன் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக இன்று மதுரை வருகிறார்.
விஜய் மதுரை வரும் நிலையில் விமான நிலையத்திற்கு உள்ளே தவெக தொண்டர்களுக்கு அனுமதி இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
திறந்த வெளி வாகனத்தில் மதுரையில் விஜய் ரோட் ஷோ நடத்த உள்ளதாகவும் விமான நிலையத்திற்கு வெளியே இருந்து 5 கிலோமீட்டர் தூரம் சாலை மார்க்கமாக மக்களை விஜய் சந்திக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.