Thursday, March 27, 2025

விடாமுயற்சி படத்தின் முதல் நாள் வசூல்

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் விடாமுயற்சி திரைப்படம் இந்திய அளவில் ரூ.22 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. வாரத்தின் இறுதி நாள் என்பதால் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest news