இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ திரைப்படம் கடந்த 6ம் தேதி வெளியானது. இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
படம் வெளியாகி 3 நாட்கள் ஆன நிலையில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் உலகளவில் ரூ.105 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இனி வரும் நாட்களின் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.