2022-ம் ஆண்டு இந்தியாவின் துணை குடியரசு தலைவராக ஜெகதீப் தன்கர் தேர்வு செய்யப்பட்டார். நாடாளுமன்ற மாநிலங்களவை தலைவராக இருந்த அவர் மீது, உரிய நேரம் தரமறுப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைத்தன. இதற்கிடையே கடந்த ஜூலை 21ம் தேதி ஜெகதீப் தன்கர், தனது உடல்நிலையை காரணம் காட்டி துணை குடியரசு தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், ஜெகதீப் தன்கர், தனக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்தார். அவர் இந்திய தேசிய லோக் தள கட்சியின் அபய் சிங் சவுதாலாவுக்கு சொந்தமாக டெல்லியின் சத்தார்பூர் பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் குடியேறினார். அவருக்கு சொந்தமான பொருட்கள் அனைத்தும் பண்ணை வீட்டுக்கு முன்னதாகவே கொண்டு செல்லப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.